சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ள இலங்கை!
Saturday, August 13th, 2022
இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.
இதன் படி, உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.
மேலும், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனடா தமிழ் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் மீதான தடையையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெளிநாடு செல்ல மாகாணசபை உறுப்பினர்கள் அனுமதி பெற வேண்டும்!
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுபணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியது!
பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்?- தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனம் !
|
|
|


