சில தூதுவர்கள் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களின் அதிகாரத்திற்கும் மேலாக செயற்படுகின்றனர் – வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குற்றச்சாட்டு!

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தூதுவர்கள் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களின் அதிகாரத்திற்கும் மேலாக செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு தொடர்பான பாதீட்டின் குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிலர் நாட்டின் செயற்பாடுகளுக்கு தமது பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர். எனினும், சிலர் மத்தியில் எமது தேவை தொடர்பில், தெளிவின்மை காணப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தூதரக சேவையினை எவ்வாறு வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில், கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்கள்!
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1199 ஆக உயர்வு!
வெளிநாடுகளிலிருந்து மேலும் 591 பேர் நாடு திரும்பினர்!
|
|