சிலதினங்கள் மின்வெட்டு இருக்கும்!- மின்சார சபை
Tuesday, March 15th, 2016
நுரைச்சோலை மின்நிலையத்திலிருந்து தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததனால் இன்றும் நாளையும் மின்வெட்டுக்கள் இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நேற்றும் நாட்டின் பல பிரதேசங்களில் நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெற்றுள்ளது.
இதனால் வைத்தியசாலைகள் தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ரயில் போக்குவரத்துக்கான சமிக்ஞை விளக்குகள் சில பகுதிகளில் செயற்படாத காரணத்தினால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக ரயில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீடொன்றுக்குள் புகுந்து நபர்கள் அட்டகாசம் - யாழில் சம்பவம்!
முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள் - இன்றுமுதல் பதிவுகள் ஆரம்பம் என போக்குவரத்து ...
இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைய இந்தியாவுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கம் - ...
|
|
|


