சிறைச்சாலைகளுக்குள் இடமாற்றப்படும் கைதிகள்!

Thursday, May 2nd, 2019

சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களைத் தடுக்கும் வகையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 128 முஸ்லிம் கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டபள்யூ. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 75 பேர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கும் ஏனைய கைதிகள் வாரியபொல மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதனைத்தவிர, மாவனெல்ல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 பேர் தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெலிக்கடை, மெகசின், நீர்கொழும்பு, காலி, களுத்துறை உள்ளிட்ட 11 சிறைச்சாலைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டபள்யூ. தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

நுளம்பு பொருகும் அபாயம் : கிணறுகளுக்கு மேல் தடுப்பு வலை இடவும் - சுகாதாரப்பிரிவினர் அறிவுறுத்து!
தேர்தல் வேண்டாம் என கோசம் எழுப்பும் விசித்திரமான எதிர்க்கட்சி இலங்கையில் மட்டும்தான் இருக்கின்றது - ...
மின்கட்டண உயர்வு குறித்து 3 நாட்களுக்குள் தீர்மானம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!