சிறுவரிடமிருந்து சிறுவருக்கு கொரோனா பரவுவது மிகவும் குறைவு – சிறுவர் சுவாச சிகிச்சை மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!

Monday, November 8th, 2021

சிறுவரிடமிருந்து சிறுவருக்கு அல்லது சிறுவரிலிருந்து பெரியவருக்கு கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவு என மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சப்பட வேண்டாம் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் சுவாச சிகிச்சை நிபுணரான வைத்தியர். சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது முக்கியம், ஏனெனில் இது கல்வி நடவடிக்கைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து அம்சங்களிலும் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுவர்களிலிருந்து சிறுவர்க்கு அல்லது சிறுவர்களிலிருந்து பெரியவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவு. ஒரு வகுப்பறையில் கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர் இருந்தால், அதே வகுப்பில் உள்ள ஏனைய எல்லா சிறுவர்களுக்கும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சிறுவருடன் நெருக்கமாக பழகும் சில மாணவர்கள் மாத்திரமே வைரஸால் பாதிக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயிற்சியளித்தால், பாடசாலையிலும் சரியான கண்காணிப்பு இடம்பெற்றால், பாடசாலையில் சிறுவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: