சிறுபோகத்தில் நெல் தவிர்ந்த பயிர்களுக்கு முன்னுரிமை – விவசாய அமைச்சு அறிவிப்பு!
Sunday, January 29th, 2023
இந்தவருட சிறுபோகத்தில் நெற் செய்கைக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களை பயிரிடுவதற்கு முன்னுரிமையளிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக இரசாயன உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெரும்போகத்தில் சேதன உரங்களை கொள்வனவு செய்வதற்கு 16,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல் சாகுபடி செய்யப்படும் ஒரு ஹெக்டேயர் நிலத்து இருபதாயிரம் ரூபாவும், இரண்டு ஹெக்டேயருக்கு 40,000 ரூபாவும் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சேதன உரங்களை விநியோகிப்பதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் மாவட்ட குழுக்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


