சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்ப வேண்டும் – செய்ட் அல் ஹூசைன்!
Saturday, February 18th, 2017
இலங்கையில் சிறுபான்மை மக்கள் வாழும் மற்றும் வழிபடும் இடங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியான செயற்பாடுகள் குறித்து மனித உரிமை பேரவையில் சம ர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே செய்ட் அல் ஹூசைன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:
குடாநாட்டின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த அரசு நடவடிக்கை!
உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்!
தடகளப் போட்டி பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்த மகாஜனக் கல்லூரி அதிபருக்கு எதிராக நடவடிக்கை - வடக்கு க...
|
|
|


