சிறுபான்மை கட்சிகளுடன் அரசாங்கம் விரைவில் சந்திக்க ஏற்பாடு – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

சிறுபான்மை கட்சிகளை சந்தித்து அரசாங்கம் விரைவில் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த கலந்துரையாடலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய வடக்கு – கிழக்கு கட்சிகளுக்கும், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
தற்போது நிலவும் அரசியல் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொவிட் - 19 : 2 ஆயிரத்து 855 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் பிரதிநிதி விவகாரம் - சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு இரத்து!
மஹிந்த முன்னரே அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - தாக்குதல்களின் பின்னணியில் ஜே.வி.பி மற...
|
|