சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான ஜுலை மாதத்திற்கான கொடுப்பனவு திறைசேரியினால் விடுவிப்பு!

Wednesday, August 23rd, 2023

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான ஜூலை மாத கொடுப்பனவு திறைசேரியினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி திறைசேரியினால் சகல மாவட்ட செயலகங்களுக்கும், வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக, 2 ஆயிரத்து 688 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் வரையில், தற்போது வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவை மாற்றமின்றி வழங்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், குறித்த மூன்று பிரிவினர்களிலும், 6 இலட்சத்து, 47 ஆயிரத்து 683 பேர் நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தகுதி பெற்றுள்ளனர்.

5 இலட்சத்து 17 ஆயிரத்து 962 முதியோரும், 88 ஆயிரத்து 602 விசேட தேவையுடையோரும், 41 ஆயிரத்து 119 சிறுநீரக நோயாளர்களும் நலன்புரி கொடுப்பனவுக்கான காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

முதியோர் கொடுப்பனவை அஞ்சல் அலுவலகங்களிலும், விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவை, பிரதேச செயலாளர் காரியாலயங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஜனாதிபதி தலையீடு – வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை – ஒரு சில ...
இலங்கை வரும் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் அவசியமில்லை – வெளியானது புதிய சுக...
விவசாயத்துறையை கட்டியெழுப்ப புதிய தொழில் நுட்பரீதியிலான வேலைத்திட்டம் - அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக...