சிறந்த சேவையை வழங்குபவர்களாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்து!

Wednesday, March 23rd, 2022

மக்களுக்கும் கிராம அலுவலர்களுக்குமான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளவும் மக்களிடையே நல்லுறவை பேனி சிறந்த சேவையை வழங்குபவர்களாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முகாமைத்துவப் போட்டியில் வெற்றி பெற்ற கிராம அலுவலர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று(22) பிற்பகல் நடைபெற்றது இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரவிக்கையில்,

“அதாவது மக்களுக்கும் கிராம அலுவலர்களுக்குமான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளவும் மக்களிடையே நல்லுறவை பேணி அவர்களுக்கான சிறந்த சேவையினை வழங்குவதோடு ஒரு நல்ல அபிப்பிராயத்தையும் தோற்றுவிப்பதாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும்.

கிராம அலுவலர்கள் அதிகாரிகள் மக்களுடனான நல்லுறவை பேணிக்கொள்வது மிக அவசியமாகும் கிராம அலுவலர் அலுவலகங்களானது மக்களுக்கான சிறந்த சேவையை வழங்கும் மையங்களாக அமைய வேண்டும்

அதாவது பொது நிர்வாக சேவைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் ஊடகமாக கிராம அலுலர்களே உள்ளனர்.அரசாங்கத்தின் எந்த கொள்கையாக இருந்தாலும் சரி அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் கிராம அலுவலர்கள் பொறுப்பு வாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர்”.என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

000

Related posts: