சிறந்த சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – ஜனாதிபதி!

நாட்டில் அறிவிலும் பண்பிலும் சிறந்த சிறுவர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் பாதுகாப்பிற்காகவும் வளர்ச்சிக்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்கிறது போதைபொருள் பாவனையில் இருந்து இளம் தலைமுறையினரை மீட்பதற்காக தேசிய கருத்திட்டங்கள் பலவும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பல சவால்மிகுந்த சூழ்நிலைகளின் மத்தியில் பிள்ளைகளை பாதுகாப்பதற்காக சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்
Related posts:
வடக்கு கிழக்கிற்கு இரண்டு கோடி நாணயங்கள் - மத்திய வங்கி!
வடக்கு கிழக்கிற்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சர்!
கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் கிகிச்சை பெறுபவர்களும் வாக்களிப்பதற்கான பொறிமுறையொன்...
|
|