சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே தியாகம் செய்வோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்து!

சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே தியாகம் செய்வோம் என்ற கௌதம புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டை, ஒரு நாடாக தற்போதைய நெருக்கடியான நிலையிலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விசாக பூரணைதின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாட்டை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு புத்தரின் போதனைகள் வழிகாட்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவான பௌதிக வளர்ச்சியை நோக்கி நகரும் உலகில் மன வளர்ச்சியுடன் கூடிய ஆன்மீக மற்றும் கண்ணியமான மனிதனை உருவாக்குவது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
00
Related posts:
4500 மாணவர்களுக்கு உயர்தரத்தில் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு!
கடல் மார்க்கமான போதைக் கடத்தலை கட்டுப்படுத்த கடற்படை நடவடிக்கை!
சித்தங்கேணி இளைஞன் கொலை விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!
|
|