சின்னையாவை சந்தித்த சரத் பொன்சேகா!

இலங்கையின் 21ஆவது கடற்படை தளபதியான வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னையாவுக்கும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பு கடற்படையின் தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.கடற்படை தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற பின்னர் சின்னையாவுக்கும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் முதன்முறையாக நடைபெறும் உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.
இதில் சின்னையாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பொன்சேகா, இலங்கை கடற்படையின் தளபதியாக முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.மேலும் இருவரின் உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுபடுத்தும் வகையில், நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உடன் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!
தனியார் மயமாகுமா புகையிரத திணைக்களம் ?
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று!
|
|