சின்னமடு பகுதியில் சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!
Sunday, June 2nd, 2024
…….
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் கடந்த இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் நாரந்தனையைச் சேர்ந்த 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இரு சிறுவர்களும் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றுள்ளனர்.
கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள சிறிய நீர் நிலையில் அவர்களது சடலங்கள் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.
இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக நீர் நிலையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


