சினிமாவை ஒழுங்குபடுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி – தொலைக்காட்சியையும் உள்ளடக்குமாறும் கோரிக்கை!

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டம் தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், திரைப்படங்கள், தொலைக்காட்சிகளை ஒழுங்குபடுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் பந்துல குணவர்தன இதுதொடர்பில் விளக்கமளித்தார்.
நீண்டகாலமாக பல்வேறு குழுக்கள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தன. நான் இந்த அமைச்சு பதவியை ஏற்றபின்னர் விடயதானங்கள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களைக்கொண்டு குழுவொன்றை நியமித்து அறிக்கை கோரினேன். அதற்கமையவே, இந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள் தொடர்பில் மாத்திரமே முன்வைத்திருந்தேன், ஆனால், அதற்கு அப்பால் சென்று, தொலைக்காட்சியையும் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவை அமைக்குமாறு அமைச்சரவை கூறியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|