சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
Tuesday, September 27th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong இடையே டோக்கியோ நகரில் இரு தரப்பு பேச்சுவார்த்தையொன்று ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி மற்றும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோஷிமசா ஹயாஷி இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று(26) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைத் துறைமுகத்தில் ஜப்பானிய கடற்படை கப்பல்கள்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து: ஐ.நாவில் இலங்கை அறிவிப்பு!
பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒ...
|
|
|


