சிகரெட் கம்பனி பதிவு தகவல் உண்மையில்ல – சுகாதார அமைச்சர்!

இலங்கையில் புதியதொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த அரசைப் போன்று புகைத்தலைக் கட்டுப்படுத்த அர்ப்பணிக்கும் பிறிதோர் அரசு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவரால் வெளியிடபபட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில்லறை விலைக்கு சிகரெட் விற்றல் மற்றும் பாடசாலைகள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் சிகரெட்களை விற்பனை செய்தல் போன்றவற்றை தடுக்கத் தேவையான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
அரசியல் கைதிகளின் போராட்டம் நிறைவுக்கு வருகின்றது!
சந்திரிக்கா சாத்தான் போன்று வேதம் ஓதுவது சரிதானா? - ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் விந்தன்!
இலங்கைத் தொழிலாளர்களுக்கு இத்தாலியில் வேலை வாய்ப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தகவல்!
|
|