சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணம் செலுத்தியது.!
Tuesday, November 28th, 2017
உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இக்கட்டுப்பணம் இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளது.
சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளாத சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களைக் கோருமாறு மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்தல் விடுத்திருந்தது.
இதற்கமைவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி முதலாவதாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Related posts:
|
|
|


