சாரதி அனுமதி பத்திரம், வருமான வரிப் பத்திரம், வாகன காப்புறுதி புகை பரிசோதனை பத்திரம் ஆகியன சாரதிகள் கைவசம் இருக்க வேண்டும் – பொலிஸார் அறிவுறுத்து!

Saturday, June 8th, 2024

வாகன சாரதிகள் கைவசம் சாரதி அனுமதி பத்திரம், வருமான வரிப் பத்திரம், வாகன காப்புறுதி, வாகன புகை பரிசோதனை பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்குமாறு பொலிஸார் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

அத்துடன், கனரக வாகனங்களுக்கான ஆவணங்களை, கனரக வாகன சாரதிகள், கனரக வாகனங்களை செலுத்தும் போது வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு

அனைத்து வாகனங்களை செலுத்தும் முன்னர் வாகனத்திற்கான ஆவணங்களை சரி பார்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: