சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் புதிய ஒழுங்கமைப்பு !
Saturday, February 15th, 2020
இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் நடவடிக்கை மேலும் இலகுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வரும் மக்கள் கடுமையான சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
எனினும் போக்குவரத்து திணைக்களத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட திடீர் விஜயத்தை அடுத்து மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இனி வரும் நாட்களிலும் 3 மணி நேரத்திற்குள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
Related posts:
20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால், நாடாளுமன்றம் வெறும் அதிகாரம் அற்ற சபையாக மாறும் - இலங்கை சட்ட...
இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும்...
காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி சுட...
|
|
|


