சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பணிப்புரை !

சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு தேவையான அட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவற்றை வழங்குவது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான டிமெரிட் புள்ளி முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தெரிய வந்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களை ஒன்லைன் தொழில்நுட்பத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், எழுத்துத் தேர்வுகளை ஒன்லைன் மூலம் நடத்துவது தொடர்பான விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டன.
மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை விசேட பணிகளாகக் கருதி, அவற்றை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தி, உரிய தரப்பினரின் ஒப்புதலுடன் டிமெரிட் புள்ளி முறை உள்ளிட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|