சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!
Friday, April 2nd, 2021
சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
முன்பதாக கடந்த வருடம் நீடிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலமானது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முடிவடைவடைந்துள்ளது.
இந்நிலையிலேயே, ஏப்ரல் 1 ஆம் திகதிமுதல் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதிவரை அதாவது சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை 6 மாதங்களால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாகச் சாரதி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அலரி மாளிகையை விட்டு வெளியேறும் முன்னாள் பிரதமர்?
அனுமதி பத்திரங்களை தவறான முறையில் பயன்படுத்தினால் கடும் நடவடிகை – பொலிஸார் எச்சரிக்கை !
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள் – அச்சத்தில் மக்கள்!
|
|
|


