சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் உயர்த்தப்படாது – போக்குவரத்து ஆணையாளர்!

Saturday, November 26th, 2016

முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் உயர்த்தப்படாது என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணம் அதரிக்கப்படாது.

பதிவு செய்யப்படாத வாகனங்களின் அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது.உண்மையில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இன்னமும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்தப்பட்டு வருகின்றது. வரவு செலவுத் திட்ட தீர்மானங்கள் வரவு செலவுத் திட்டம் பூர்த்தியானதன் பின்னரே அமுல்படுத்தப்படும்.

முச்சக்கர வண்டி சாரதிகள் மட்டுமன்றி ஏனைய வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளவும் 18 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதெல்லை 25 ஆக உயர்த்தப்படும் என வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இன்னமும் இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3573_1460716601_PhototasticCollage-2016-04-15-12-33-58

Related posts: