சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!
Tuesday, November 20th, 2018
நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி பத்திரங்களில் சிக்கல் ஏதும் காணப்பட்டால் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் அனைத்து சாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி பத்திரங்கள் அஞ்சல் சேவை ஊடாக அனுப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மத்திய வங்கி தொடரபாக மீண்டும் முறைப்பாடு!
வேகமாக பரவுகிறது டெல்டா மாறுபாடு: அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!
தொடர் தோல்விகளின் எதிரொலி - இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அமைச்சர் அலி சப்ரி அழைப்பு!
|
|
|


