சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு !
Thursday, February 17th, 2022
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (17) நிறைவடைகின்றது.
விண்ணப்பங்களை ஏற்கும் திகதி கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், இன்றையதினம் (17) வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிகளுக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் Exam SriLanka எனும் முகவரிக்கோ பிரவேசித்து சாதாரண தர பரீட்சைக்கு Online ஊடாக விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மலசல கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென முழைத்த கடைகள்: பின்னணியில் யாழ். மாநகரி...
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
யாசகம் பெறுவோருக்கு பணம் வழங்குவதை தவிருங்கள் - பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்!
|
|
|


