மலசல கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென முழைத்த கடைகள்: பின்னணியில் யாழ். மாநகரின் முக்கிய புள்ளி என சிற்றங்காடி வியாபாரிகள் குற்றச்சாட்டு!

Monday, December 16th, 2019

யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட யாழ்.நகர வியாபாரா சிற்றங்காடி தொகுதியில் பொது மலசல கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியை இரவோடு இரவாக யாழ் மாநகரின் அதிகாரம் மிக்க ஒருவரால் தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டு சிற்றங்காடி அமைக்கப்பட்டதால் ஏனைய வியாபாரிகள் யாழ் மாநகருக்கு போர்க்கொடி எதிராக தூக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

கடந்த வருடம் யாழ் நகரப்பகுதியில் நடைபாதை வியாபாரம் மேற்கொண்ட ஒருதொகுதி வியாபாரிகளின் நலன் கருதி நகர் பகதியில் சிற்றங்காடி ஒன்று அமைக்கப்பட்டு எற்கனவெ நடைபாதை வியாபாரத்தை மேற்கொண்ட வியாபாரிகள் ஒருதொகுதியினருக்கு வழங்கப்பட்டது. இதற்காக நாளாந்தம் 250 ரூபா நிதியை யாழ் மாநகரசபை அறவிட்டு வருகின்றது.

யாழ் மாநகரின் இந்த நடைமுறையால் கடை தொகுதி வழங்கப்பட்டாத சில வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். குறித்த பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தமக்கு இடம் ஒதுக்கி தரும்படி மாநகரசபையிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் அவர்களுக்கான நியாயம் இதுவரை வழங்கப்படாதிருந்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது ஒருசிலருக்கு  மாநகரின் அதிகாரம் மிக்க தரப்பினரால் இரகசியமான முறையில் சபையின் அனுமதி பெறப்படாது வழங்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.

அதுமட்டுமல்லாது குறித்த அங்காடிக்கு என பொது மலசலகூடம் அமைக்கவென ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த பகுதியை தற்போது தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் சிறிய கடை ஒன்று நேற்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கடைக்கு 5 அடி நிலம் என வரையறை செய்யப்பாட்டு ஒப்பந்தம் செய்யப்படட்டிருந்த நிலையில் குறித்த கடைக்கு 8 அடி நிலம் வழங்கப்பட்டுள்ளதுடன்  அதற்கு யார் உரிமையாளர் என்று கூட தெரியாத மர்மமான முறையில் அமைகக்கப்பட்டுள்ளதாக  ஏனைய சிற்றங்காடி வியாபாரிகள் குற்றம் சமத்தியுள்ளனர்.

அத்துடன் குறித்த அங்காடி தொகுதியில் இன்னும் பல இடங்கள் வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படாதிருக்கும் நிலையில் குறித்த பகுதி மலசல கூடம் அமைப்பதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியை யாழ் மாநகரின் அனுமதி இன்றி வழங்கப்பட்ட முடியாது. எனவே குறித்த பகுதி நிலம் கடைக்கென திடீரென வழங்கப்பட்டள்ளமையானது பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: