சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுமுதல் தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Monday, May 16th, 2022

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை (17) நள்ளிரவுமுதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2021 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் (Download) செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரங்கள் இதுவரை கிடைக்கவில்லையெனின், பரீட்சைகள் திணைக்களத்தின்  www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அதன் முதற்பக்கத்திலுள்ள எமது சேவைகள் எனும் நிரலின் கீழுள்ள க.பொ.த.சாதாரண தரம் 2021 அனுமதிப்பத்திர பதிவிறக்கம் பகுதியை தெரிவு செய்து, சரியான தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கத்தை குறிப்பிட்டு அனுமதிப்பத்திரத்தின் பிரதியை பதிவிறக்கம் செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: