சாட்சிய பதிவுகளுக்கு ஊடகங்களை அனுமதிப்பதில்லை – நாடாளுமன்ற தெரிவுக்குழு!

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்து வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் சில சாட்சிய பதிவுகளுக்கு ஊடகங்களை அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு நாட்டின் தேசியப் பாதுகாப்பு கருதியே எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை இன்று இந்த குழுவின் முன் இலங்கை தௌஹீத் ஜமாத்தின் பிரதிநிதிகள் மற்றும் அகில இலங்கை தௌஹீத் ஜமாத்தின் பிரதிநிதிகள் தமது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.
இந்த சாட்சிய பதிவுகள் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் 39 மருத்துவர்களுக்கு நியமனம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்களை நடத்த க...
|
|