சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பை பறிப்பதற்கு நடவடிக்கை !
Thursday, May 9th, 2019
2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமாயின், அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பு பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவரான நீதியரசர் உபாலி அபேர அபேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மஹரகம அபேக்ஷா மருத்துவமனைக் புற்றுநோய் தடுப்பு ஊசிகளைப் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி குறித்து பெண் மருத்துவர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதன் காரணமாக, உயர்மட்ட அதிகாரிகளினால், அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிலைக்கு தான் ஆளாகியுள்ளதாக குறித்த பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே ஆணைக்குழுத் தலைவர் குறித்த எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளார்.
Related posts:
நவீனத்துவத்தை காரணம் காட்டி மனிதன் ஒருவனை பூரணமானவனாக மாற்றும் ஆற்றல் கொண்ட வாசிப்பு பழக்கத்தை கைவி...
வர்த்தக மாபியாக்கள் விரைவில் கட்டுப்படுத்தப்படுவர் - அமைச்சர் நளின் றுதிபடத் தெரிவிப்பு!!
நவம்பர் 06 ஆம் திகதிவரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது - யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட வி...
|
|
|


