சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையை எட்ட எதிர்பார்ப்பு – பிரதமர் தெரிவிப்பு!
Tuesday, June 21st, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கையை எட்டவும், நிகழ்ச்சி திட்டத்தை நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாமினருடன் நேற்று இடம்பெற்று சந்திப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இட்டுள்ள ட்விட்டர் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாமினர் மத்திய வங்கியின் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமைச்சரவையில் மீன்பிடி அமைச்சிற்கு மேலதிக பொறுப்புக்கள்!
எதிர்வரும் 13 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட கல்வி வலயத்தின் ஆங்கில தின விருதுவழங்கும் நிகழ்வு!
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் கிராம உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்துங்கள் - தேர்தல்கள் ஆ...
|
|
|


