சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144 ஆவது அமர்வில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைக் குழுவினர் பங்கேற்பு!
 Monday, March 21st, 2022
        
                    Monday, March 21st, 2022
            
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144 ஆவது அமர்வு இந்தோனோஷியாவின் பாலியில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த அமர்வானது நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவும், குறித்த அமர்வில் பங்கேற்றுள்ளது.
குறித்த குழுவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், காவிந்த ஜயவர்தன, ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது இளைஞர்கள் தொடர்பான விடயங்கள், காலநிலை மாற்றம், உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க – சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவிப்பு!
நேரத்தைக் கழிப்பதற்காகவே காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் -  பொராட்டத்தில் தகுதியான காரணம் எதுவுமில்லை...
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை - பாத...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        