சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனை கோரும் விடயத்தில் சட்ட நிறுவனங்களை அணுகியது நிதி அமைச்சு!
Wednesday, March 23rd, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனை கோரும் விடயத்தில், ஆரம்ப விசாரணைகளுக்காக சில சட்ட நிறுவனங்கள் அணுகியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முழுமையான செயன்முறைக்கு 3 முதல் 4 மாத காலம் எடுக்கும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்த மாதம் வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில், கடன் மறுசீரமைப்பு தொடர்பான தொழில்நுட்ப உதவிகளுக்காக சர்வதேச சட்ட நிபுணர்களின் குழுவை அமர்த்த இலங்கை எதிர்பார்ப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணி வெளியே போகாதீர்கள் - இறங்கி துப்பறவு செய்யுங்கள் - மாற்றம் கிடைக்க...
பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதம்முதல் திறக்க நடவடிக...
இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான கடிதங்களை வழங்குவதில்லை – கல்வி அமைச்சர் ...
|
|
|


