சம்பூர் அனல் மின்நிலையம் அமைக்கப்பட மாட்டாது – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவிப்பு!

Tuesday, September 13th, 2016

சம்பூரில் அனல்மின் நிலையத்தை அமைக்க போவதில்லையென மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

வரையறுக்கப்பட்ட சுற்றாடல் மன்றம், சம்பூர் அனல்மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரட்ணம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

sampoor1-1

Related posts: