சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காது!
Tuesday, March 9th, 2021
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு செய்யப்படாமையினால் சமையல் எரிவாயு நிறுவனங்கள் நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாக பொருளாதார அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக்கு அறியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் உலக சந்தையில் சமையல் எரிவாயுவிற்கான விலை தொடர்பிலும் அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறாயினும், சமையல் எரிவாயுவின் விலையானது எந்தவொரு காரணத்திற்காகவும் அதிகரிப்பு செய்யப்படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வரும் 15 ஆம் திகதி ஆரம்பம்!
பெரும்போகத்தின் உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் -. விவசாய அமை...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
|
|
|


