சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவுமுதல் குறைப்பு!

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 138 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை வாழ்க்கைச் செலவினக் குழு மேற்கொண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் அமுலில் உள்ள விலைக்கமைய உள்ளூர் சந்தையிலும் சமையல் எரிவாயுவின் விலை நிர்ணயிக்கப்பட இருக்கின்றது.
இதற்கு அமைவாகவே சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க வாழ்க்கை செலவினக் குழு தீர்மானித்ததாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் 138 ரூபாவால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் குறித்து கூட்டம்.
இடைக்கால கணக் அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதி!
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவு 3 மாதங்களுக்குள் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு...
|
|