சமூகப் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டில் இலங்கைக்கு உதவுவதற்கு தயார் – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானினர் உறுதியளிப்பு!

சமூகப் பொருளாதார அபிவிருத்தி செயற்பாட்டில் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாக அந்த நாட்டு உயர்ஸ்தானிகர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பிரிஸிடம் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் கடல் மார்க்கமான ஒழுங்கற்ற இடம்பெயர்வு, கொவிட்-19 பரவலை எதிர்த்துப் போராடுதல், கல்வி, தொழில்நுட்பம், தொழிற்பயிற்சி, பொருளாதார முதலீட்டுத் துறைகளில் அவுஸ்திரேலியாவினால் ஈடுசெய்யப்பட்ட ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|