சமுர்த்தி வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!
Thursday, January 5th, 2017
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஏற்பட்டுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
வறுமை ஒழிப்புத் தொடர்பாக ஜனாதிபதியின் இலக்குகளை நிறைவேற்று நடைமுறையில் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சிடம் அதிகளவிலான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் குறிப்பி;டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சமுர்த்தி அபிவிருத்தித்; திணைக்களத்தில் நிலவும் 5,000 வெற்றிடங்களை நிரப்புவது அவசியம். சமுர்த்தியின் மூலம் வங்கி வலைப்பின்னலும், சமூகப் பாதுகாப்பு இயக்கமும் வீடமைப்பு அபிவிருத்தித் திட்டமும் சிறப்பான முறையில் கட்டியெழுப்பப்பட்டன. எவ்வாறேனும் கடந்த 10 ஆண்டுகளில் சமுர்த்தி வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை தொழில் முயற்சியாளர்களுக்கு உரிய முறையில் வழங்க முடியாமல் போனது. இதற்கு முகாமைத்துவத்தின் குறைபாடு காரணம் – என்றார்.

Related posts:
|
|
|


