சமுர்த்தி பயனாளிகளை நுண் தொழில் முயற்சியாளர்கள் என்ற நிலைக்கு மாற்றும் வேலைத்திட்டத்தை உடனடியாக திட்டமிட வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, August 25th, 2020

சமுர்த்தி நிவாரணம் நாட்டுக்கு சுமையாவதற்கு இடமளிக்காது குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமே வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும். அதனால் வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கி சமுர்த்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் சமுர்த்தி வழங்குவதற்காக வருடாந்தம் செலவிடப்படும் தொகை 50,000 மில்லியன் ரூபாய்கள் ஆகும். இந்த தொகை நாட்டுக்கு முதலீடாக வேண்டும். சமுர்த்தி பயனாளிகளை நிவாரணம் பெறும் மனநிலையில் இருந்து மீட்டெடுத்து நுண் தொழில் முயற்சியாளர்கள் என்ற நிலைக்கு மாற்றும் வேலைத்திட்டத்தை உடனடியாக திட்டமிட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: