சமுர்த்தி பயனாளர்களுக்கு மேலும் 10 ஆயிரம் வரை கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

சமுர்த்தி உதவி பெறுபவர்களிற்கு தற்போது வழங்கிய 5 ஆயிரம் ரூபா மானியம் தவிர்ந்து மேலும் 10 ஆயிரம் ரூபா வரையில் கடன் வசதியினையும் வழங்கும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மகேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் மகேசன் மேலும் கூறுகையில் –
சமுர்த்தி பயணாளிகளிற்கு 10 ஆயிரம் ரூபா கடனாக வழங்க முற்பட்ட சமயம் 5 ஆயிரம் ரூபா மானியமாக வழங்கப்பட்டது. அந்த மானியத்திற்கு மேலதிகமாக முன்னர் தீர்மானிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாவினையும் கடனாக வழங்க தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவ்வாறு வழங்கும் 10 ஆயிரம் சமுர்த்தி நடவடிக்கைகளிற்கே உட்பட்டது.
இதில் நீண்ட கால அங்கத்தவர்களிற்கு சேமிப்புத் தொகைக்கு ஏற்பவே கடன் தொகை தீர்மானிக்கப்படும். அதில் உச்ச எல்லையே 10 ஆயிரமாக அமையும் . சிலருக்கு 5 ஆயிரமாகவும் இறுதியாக இணைந்த சிலர் அதனை பெற முடியாத தன்மையும் கானப்படும்.
இந்தப் பணமானது சமுர்த்தி வங்கியின் சுற்று நிருபத்திற்கு அமைய அதனைப் பெற விரும்புபவர்களிற்கும் தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் வழங்குவதன் மூலம் நிதி நெருக்கடியற்ற வாழ்வாதரத்தினை கொண்டு செல்ல முடியும். என்றார்.
நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு குறித்த சமுர்த்தி மானியத் திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த மாதம் முற்பகுதியில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பத்திரம் தாக்கல்செய்து அனுமதி பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|