சமுர்த்திப் பயனாளிகள் தொடர்பில் கணக்கெடுப்பு!

Saturday, October 7th, 2017

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சமுர்த்திப்பயனாளிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த கணக்கெடுப்பை முழுமையாக மேற்கொண்டு நிறைவு செய்வது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது என்று தெரியவருகின்றது.

இந்த கணக்கெடுப்புப் பணிகளை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எந்தவொரு பயனாளிக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் பிரதீப் யசரத்ன ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் காணப்படும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், பயனாளி ஒருவர் உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் பொருத்தமான நபருக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமுர்த்திக் கொடுப்பனவுகளுக்கு தற்போது 14 இலட்சம் பேர் தகுதியுடையவர்களாக உள்ளனர். 8 இலட்சத்து 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. ஆகக்குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பொருள்கள் சிலவற்றின் கீழ் 420 ரூபா முதல் 3 ஆயிரத்து 500 ரூபா வரை சமுர்த்தி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

Related posts: