சமுர்த்திக் குடும்பங்கள், மீனவர்களுக்கும் பழைய விலையில் மண்ணெண்ணெய்!
Friday, May 11th, 2018
மண்ணெண்ணெயின் விலை லீற்றர் 101 ரூபாவாக அதிகரிக்கப்படும்போதும் சமுர்த்திப் பயனாளர்கள் மற்றும் மீனவர்களுக்கு பழைய விலையான 44 ரூபாவுக்கே வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
மண்ணெண்ணெயின் விலையை நேற்று நள்ளிரவு முதல் 57 ரூபாவால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்தது.
மண்ணெண்ணெயின் விலை பெருமளவில் அதிகரிக்கப்பட்டபோதும் அதனை அதிகளவு பயன்படுத்தும் சமுர்த்திக் குடும்பங்கள் மற்றும் மீனவர்களுக்குப் பழைய விலையிலேயே அது விநியோகிக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மிக விரைவில் எம்.ஆர்.ஐ. ஸ்கானர்!
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படும் - சீரம் நிறுவனம் உறுதி !
பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம் !
|
|
|


