அரச சேவையாளர்களுக்கு இன்றுமுதல் வேதன அதிகரிப்பு – நிதியமைச்சு தெரிவித்துள்ளது!

Monday, July 1st, 2019

முன்மொழியப்பட்ட அரச சேவையாளர்களின் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட கொடுப்பனவுகளை அதிகரித்தல் இன்றுமுதல் அமுல்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 11 இலட்சம் அரச சேவையாளர்களுக்கான 2 ஆயிரத்து 500 ரூபா இடைக்கால கொடுப்பனவு, பாதுகாப்பு கொடுப்பனவை உயர்த்துதல், ஓய்வூதியதாரிகளின் வேதன முரண்பாட்டை நீக்குதல் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை உயர்த்துதல் உள்ளிட்டவை இன்றுமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக சுமார் 40 ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:


சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் பொதுமககள் அலட்சியம் – கொரோனா மீண்டும் பரவலாம் என அரசமருத்துவ அதிகா...
வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் கட்டாயம் - பிரதி பொலிஸ் மாஅதிபர் ...
திங்கட்கிழமைமுதல் மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் - மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!