சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி!

Sunday, June 30th, 2024

சமாதான நீதவான்களுக்கான நெறிமுறைகள் அடங்கிய உத்தரவுகளுக்கு நீதி அமைச்சர் ஆலோசனைக் குழு அனுமதி அளித்துள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இந்த குழுக் கூட்டம் இடம்பெற்ற போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளில் சமாதான நீதிவான்களின் நியமனம் இடைநிறுத்தம், அவற்றை இரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பான நெறிமுறைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் சமாதான நீதவான்களை நியமிப்பதற்கு குறிப்பிட்ட முறைமைகள் எதுவும் காணப்படவில்லை எனவும் அவர்களின் தகைமைகள் குறித்து பரிசீலிக்கப்படவில்லை எனவும் நீதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: