சனல் 4 காணொளி தொடர்பில் சுரேஷ் சாலே முறைப்பாடு – பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணை!

Monday, September 11th, 2023

சனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சனல் 4 சமீபத்தில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான காணொளி வெளியிட்டுள்ளது, அதில் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயும் குற்றம் சாட்டியிருந்தது.

தன்னை சங்கடப்படுத்தும் வகையில் சனல் 04  வேண்டுமென்றே இந்த காணொளியை ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்திற்கு சுரேஷ் சாலே முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில், குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்ததாக அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேயின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான காணொளியை வெளியிடுவதற்கு முன்னர், ஆகஸ்ட் 7ஆம் திகதி சுரேஷ் சாலேயிடம் சனல் 4 ஊடகவியலாளர்கள் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக வினவியதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுப்பதாகவும், அந்தக் காலப்பகுதியில் தான் இலங்கையில் தங்கியிருக்கவில்லை என்றும் சுரேஷ் சாலே சனல் 4 இற்கு அடுத்த நாளே எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக சட்டத்தரணி பசன் வீரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: