சந்தையில் கோழி இறைச்சி விலை அதிகரிப்பு!

Sunday, April 2nd, 2023

சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதி என்பன காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, அகில இலங்கை பாரிய மற்றும் நடுத்தர அளவிலான கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் வீரசிங்க, ​​கோழிப்பண்ணை தொழில் ஏற்கனவே நட்டத்தை சந்தித்து வருவதாக குறிப்பிட்டார்.

230 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாவாக குறைந்துள்ள போதிலும், பேக்கரி தொடர்பான உணவுப் பொருட்களின் விலைகளில் எவ்வித குறைப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பேக்கரி தொடர்பான பொருட்களின் விலை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: