சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி!

ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்கு காரணமான சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்திற்காக அனைத்து தரப்பு சந்தேக நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் சட்டமா அதிபர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளுக்கும் தனது முழு ஆதரவை வழங்குவதாக பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis) தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சாதாரணதரப் பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டையை துரிதப்படுத்தவும்!
காற்று மாசு நிறைந்த பகுதியாக கண்டி தெரிவு!
வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு - அமைச்சரவை அங்கீகாரம்!
|
|