சந்தேகத்திற்கிடமான லொறி – வான் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பு!
Wednesday, April 24th, 2019
வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் வான் ஒன்றும் கொழும்பிற்குள் வந்துள்ளதாக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடும் என சந்தேகிக்கப்படும் மேலும் சில வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
5 மோட்டார் சைக்கிள்கள், கெப் வாகனம் மற்றும் வேனொன்று தொடர்பில் அதன் பதிவு இலக்கங்களுடன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் விமானங்களை இடைநிறுத்தியது குவைத்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக...
மதவாதத்தை முதலீடாக்க நீதிபதியை விமர்சிப்பதை ஏற்க முடியாது - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாள...
|
|
|


