கொரோனா தொற்று குறித்த அறிக்கை வாராந்தம் நாடாளுமன்றில் – சுகாதார அமைச்சர் நடவடிக்கை!

Wednesday, August 4th, 2021

ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நாடாளுமன்றம் கூடும்போதும் நாட்டின் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவினால் சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்தள்ளார்..

ஒவ்வொரு நாடாளுமன்ற வாரத்தின் தொடக்கத்திலும் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது சுகாதார அமைச்சரினால் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பான தனிநபர்களின் பல்வேறு அறிக்கைகள் காரணமாக எழும் முரண்பாடான பிரச்சினைகளை தீர்க்க இத்தகைய அறிக்கை உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தில் சுகாதார அமைச்சர் அல்லது பிரதமரால் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து வாரந்தம் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிடுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையிலேயே ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நாடாளுமன்றம் கூடும்போதும் நாட்டின் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: