சந்திரவிம்பம் போன்று மெல்ல மெல்ல இப்பகுதி வளர்ச்சியடைந்து வருகின்றது – யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர்!

Monday, November 21st, 2016

சந்திரவிம்பம் போன்று மெல்ல மெல்ல இப்பகுதி வளர்ச்சியடைந்து வருகின்றது. அதற்கு இப்பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் வாழ் மக்கள் சமூகம் மென்மேலும் உதவவேண்டும் என பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக மேலதிக செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் அல்வாயைச் சேர்ந்த திரு கதிரவேலு சிவனொளி அவர்களுக்கு மணிவிழாவும் கௌரவிப்பு நிகழ்வும் அல்வாய் வடக்கு மஹாத்மா சனசமூக நிலையத்தின் தலைவர் அருமைத்துரை தலைமையில் நேற்று (20) பிற்பகல் 2.00 மணியளவில் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு மணிவிழா நாயகனை வாழ்த்திப் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பேசுகையில், அல்வாய் பிரதேசத்தில் பிறந்த திரு சிவனொளி அவர்கள், தனது ஊரை நேசிப்பது போன்றே அயல் கிராமங்களையும் நேசித்து வந்துள்ளார். சமூகங்களில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தைரியமாக முகம் கொடுத்து அதனை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் இயக்கங்களிடையே சகோதர மோதல்கள் உருவான சந்தர்ப்பங்களில் பல இயக்கப் போராளிகளை பாதுகாத்துள்ளார்.

unnamed (3)

இன்றைய காலச் சூழலில் உறவுகளுக்குள் போட்டி, பொறாமை, சொத்துப் பிணக்குகள், பாகப்பிரிவினை என பல்வேறு பிரச்சினைகளைக் காண்கின்றோம். ஒருவருக்கு ஒருவர் உதவ முன்வராத நிலைகளைக் கூடக் காண்கின்றோம். இந்நிலையிலும் கூட வெளிநாட்டில் வசித்தாலும் தனது கிராமம், தனது ஊர், தனது மண் என்ற அந்தப் பற்றுக் காணமாக அதற்கு உதவவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அவர் இம்மண்ணுக்கு பல்வேறு உதவிகளை ஆற்றியுள்ளார். புலம்பெயந்து வாழும் மக்கள் மட்டுமல்ல இங்கும் வசதி படைத்தவர்களாக உள்ளவர்கள் இவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி தத்தமது கிராமங்களை உயர்த்த முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

unnamed (1)

மேற்படி கதிரவேலு சிவனொளி அவர்களுக்கு மகாத்மா சனசமூக நிலையத்தால் சமூகஜோதி என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சீமா ஆலடி சுப்பிரமணிய தேவஸ்தான தலைவர் திரு சி.சின்னராசா, கலைஞர் நல்லை தேவராசா, கவிஞர் திரு கே.ஆர்.கிருஸ்துவராஜா, சட்டத்தரணி திரு மு.சிவகுருநாதன், பருத்தித்துறை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க செயலாளர் திரு த.தபேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் திரு வே.சிவயோகன், கிராம அலுவலர் திரு ரூ.அபராஜிதன், சமுர்த்தி உத்தியோகத்தர் திரு கு.சசிகலாத் மற்றும் பழ.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

unnamed (5)

unnamed (2)

unnamed (4)

Related posts: