சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது!
கதிரவெளி கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்களை கடற்படையினர் நேற்று (29) கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2 படகுகள் மற்றும் ஒரு தங்கூசி வலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பொருட்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக வாகரை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை நேற்று மன்னார் படித்துறை கடற்பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 2 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து வல்லம் மற்றும் தங்கூசி வலையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மீனவர்களை மன்னார் கடற்றொழில் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
Related posts:
பால்மா பிரச்சினை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்!
பெற்றோல் - டீசல் தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறவிப்பு!
பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டு - யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் பொலசாரால் கைத...
|
|
|


